நடிகை குஷ்புவின் ட்விட்டர் பதிவால் கிளம்பும் சர்ச்சை!

Filed under: அரசியல் |

நடிகையாகவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் குஷ்பு இருந்து வருகிறார். தற்போது சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருவதால் அவர் மீது குற்றச்சாட்டு கிளம்பி வருகிறது. இதனால் குஷ்புவின் மீது தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

குஷ்புவின் முதலில் புதிய கல்விக் கொள்கையை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதன் பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விரைவில் குணமாக வேண்டும் என பதிவு செய்திருந்தார்.

தற்போதும் இன்று அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதற்கு குஷ்பு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் “ஜெய் ஸ்ரீராம்” என பதிவில் தெரிவித்துள்ளார். பின்பு ஸ்ரீராமர் கோவிலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதனால் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளாரா என்கிற கருத்துக்கள் வெளியாகி வருகிறது.