நடிகை கிருத்தி சனோனின் பதிவு!

Filed under: சினிமா |

நடிகர் பிரபாசை நடிகை கிருத்தி சனோன் காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் எனக்கே தெரியாமல் பலர் என்னுடைய திருமணத்தை நிச்சயித்து வந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் அனைத்தும் வதந்தி என்று நடிகை கிருத்தி சனோன் விளக்கமளித்துள்ளார்.

பாகுபலி திரைப்படம் மூலமாக பிரபலமான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து “ஆதிபுருஷ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருவதால் படப்பிடிப்பின்போது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிருத்தி சனோன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். “நான் பிரபாசை காதலிப்பதாக சில இணையதளங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை. எனக்கே தெரியாமல் திருமண தேதியை முடிவு செய்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க வதந்தி தான் இது” என்று அவர் கூறியுள்ளார். இதைடுத்து பிரபாஸ் கிருத்தி சனோன் காதல் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.