நடிகை டாப்சியின் காதலன் இவர் தான் !

Filed under: சினிமா |

சென்னை, மே 13

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை டாப்சி, அதன்பின் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்தார்.

தற்போது நடிகை டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சனுடன் டாப்ஸி நடித்த ’பிங்க்’ திரைப்படம் தான் தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற படமாக ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை டாப்சி வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலிப்பதாக பாலிவுட்டில் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகை டாப்ஸி தற்போது தனது காதலை பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். தனது காதலர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு பேட்மிண்டன் வீரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது காதலருடன் டாப்ஸி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.