நடிகை ஸ்ரேயா சரன் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் மீது புகாரளித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், ஜெயம் ரவி நடித்த “மழை,” ரஜினியுடன் “சிவாஜி,” “அழகிய தமிழ் மகன்” ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் குழந்தை பெற்றெடுத்த பின், மீண்டும் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில், வெளியான “ஆர்.ஆர்.ஆர்,” “கப்சா” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மகாராஷ்டிர மாநிலம் அலிபாக் நகரிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குச் சென்ற ஸ்ரேயா, அங்குள்ள பெரிய கூண்டிற்குள் ஏராளமான பறவைகள் அடைத்து வைத்திருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்தார். பின்னர், ஒரு வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பறவை ஆர்வலராக இருந்தால், அதைச் சுதந்திரமாக வெளியே விட வேண்டும். இத்தனை பறவைகளை கூண்டிற்குள் அடைத்து வைப்பது சட்டப்பூர்வமானதா?’’ என்று பதிவிட்டுள்ளார்.