நடிகை பூர்ணாவிற்கு டும் டும் டும்!

Filed under: சினிமா |

துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை மணமுடிக்க உள்ளார் நடிகை பூர்ணா. நடிகை பூர்ணா தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அவரது சமூக வலைதளத்தில் வருங்கால மாப்பிளையுடன் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டள்ளார்.

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். சற்றுமுன் நடிகை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பூர்ணாவின் வருங்கால மாப்பிள்ளையின் பெயர் சானித் ஆசிப் அலி. இவர் துபாயில் தொழிலதிபராக உள்ளார். சானித் ஆசிப் அலி-பூர்ணா திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.