நடிகை பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டிய நான்கு பேரை காவல்துறை கைது செய்தனர்!

Filed under: சினிமா |

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூர்ணா. இவர் மலையாள திரையுலகில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் படங்களை நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டிய உள்ளதாக நான்கு பேரை கேரளாவில் காவல்துறை கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலத்தை சேர்ந்த சரத் அஷ்ரப், ரபீக், ரமேஷ் என்ற நான்கு பேர் பூர்ணாவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு உள்ளதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் அவருடைய பெயரையும் புகளையும் வீணாகிவிடும் என மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பூர்ணாவின் தாய் கொடுத்த புகாரின் மராடு காவல்துறையினர் அந்த 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.