நடிகை வரலட்சுமிக்கு கொரோனா!

Filed under: சினிமா |

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நொயின் தாக்கத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு தவித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தோம்.

 

கடந்த சில நாட்களாகவே கொரோனா நொய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் உட்பட அரசியல் தலைவர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ் சினிமாவில், போடா போடி, சண்டக்கோழி -2, சர்க்கார் உட்பட பல படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமாருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஒரு வீடியோவில் கடந்த சில தினங்களில் தன்னைச் சந்தித்தவர்கள் கண்டிப்பாக உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என கூறியுள்ளார்.