கொரோனா பரவ இறைச்சி தொழிற்சாலைகள் தான் காரணம் – நடிகை எமி ஜாக்சன்!

Filed under: சினிமா |

லண்டன் மாடல் எமி ஜாக்சன். இவர் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தாண்டவம், கெத்து, தங்கமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு பாலிவுட்டிலும் படங்களில் நடித்தார். தற்போது எமி ஜாக்சன் அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனில் வசித்து வருகிறார். இவர் பீட்டா அமைப்பில் வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கியமாக இருப்பது இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி தொழிற்சாலைகள் ஆகியவை தான் என எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

இதனைப்பற்றி அவர் ட்விட்டரில் கூறியது: அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அனைவருக்கும் பரிசோதனை நடத்தியதில் அதிகமானோருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், ஈரமான சந்தைகள், இறைச்சிக் கூடங்கள், இறைச்சி தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு வடிவங்களில் வைரஸ் இனப்பெருக்கம் செய்ய காரணமாக உள்ளது என எமி ஜாக்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.