நடிகை வித்யூலேகா திருமண கொண்டாட்டத்தில் செல்வராகவன் !

Filed under: சினிமா |

காமெடி நடிகையான வித்யுலேகா ராமன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார், சங்கீத்ல் இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலியுடன் கலந்துக்கொண்டார், கீதாஞ்சலியின் தங்கை தான் நடிகை வித்யூலேகா ராமன். இவர் பிரபல சீரியல் நடிகர் மோகன் ராமனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.