நடுவானில் பயணிக்கு மாரடைப்பு!

Filed under: சென்னை |

மலேசியாவிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர் ஆசியா என்ற விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருந்ததையடுத்து சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சென்னையில் கோலாலம்பூர் ஏரி ஏசியா விமானம் தரையிறக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட பயணி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிகள். தற்போது அந்த பயணியின் உடல் சீராக இருப்பதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் அதன் பின் மீண்டும் பறந்து சென்றது.