நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

Filed under: அரசியல் |

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும் என்று பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும். பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். வைகோ இப்படி பேசுவது தேவையில்லாத விஷயம். இந்தியை திணிப்போம் என மத்திய அரசு எங்கும் இதுவரை சொல்லவில்லை. இந்தியை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சி அரசு. தங்க நாற்கர சாலை திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த கட்டமைப்பு மேம்பாட்டு வசதியும் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும். அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்.