நஷ்டத்தால் வீட்டை விற்றாரா?

Filed under: சினிமா |

சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராக்கெட்டரி”. அந்த படத்திற்காக செலவிட்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை என்று கூறப்பட்டது.

மாதவனுக்கு ராக்கெட்டரி படத்தால் நஷ்டம் எற்பட்டதால் அவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று விட்டதாக நெட்டிசன்கள் சிலர் செய்திகளை பரப்பினர். இச்செய்திக்கு பதிலளித்துள்ள மாதவன், “நான் சொந்த வீட்டை விற்கவில்லை. நான் என்னுடைய வீட்டில் தான் தற்போது இருக்கிறேன். மேலும் ராக்கெட்டரி படத்தால் நாங்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளோம். இவ்வாண்டு வருமான வரியை நாங்கள் அதிகம் கட்டுவோம்” என்று மாதவன் பதிலளித்துள்ளார். இதையடுத்து “ராக்கெட்டரி” விமர்சனத்தில் மட்டுமின்றி வசூலிலும் வெற்றிகரமான திரைப்படம் என்பது நெட்டிசன்களுக்கு புரிந்தால் சரி.