நாகார்ஜூனாவுடன் இணையும் தனுஷ்!!

Filed under: சினிமா |

தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணையும்#DNS படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பூஜை தொடங்கப்பட்டது.

சேகர் கம்முலாவால் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் ஒரு கலகலப்பான திரைப்படமான #DNS படமாக்கப்பட உள்ளது. சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரால், ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது. திரைப்படத்தின் பூஜையில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலர் கலந்து கொள்ள பிரமாண்டமாக இன்று தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர்களின் பொங்கல் பண்டிகையின் வெளியீடுகளான “கேப்டன் மில்லர்” (தமிழ்) மற்றும் “நா சாமி ரங்கா” மூலம் வெற்றியைடையந்தது. இவர்களது கூட்டணியில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.