நாசாவில் தமிழர்கள் பணிபுரிய காரணம் கருணாநிதி; வைரமுத்து!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

கவியரசு வைரமுத்து இன்று தமிழர்கள் நாசா, மைக்ரோசாஃப்டில் அதிகம் பணிபுரிவதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள தனி£யர் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் திமுக சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் கவியரசு வைரமுத்து பேசும்போது, “நாசா, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் தமிழர்கள் அதிகம் பணிபுரிய மிகப் பெரும் காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. அவருடைய பெருமைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார். வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.