நாளை அஜீத்தின் 2வது சிங்கில் பாடல் ரிலீஸ்!

Filed under: சினிமா |

ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. “துணிவு” படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்தான் “வாரிசு” திரைப்படத்தையும் வெளியிடுவதால், இரு படங்களுக்கும் சம அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே “துணிவு” திரைப்படத்தின் முதல் சிங்கில் “சில்லா சில்லா” பாடல் கடந்த 9ம் தேதி வெளியானது. இப்பாடல் அஜீத் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானோரால் இப்பாடல் இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளது. படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “காசேதான் கடவுளடா” விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. நாளை மாலை இப்பாடல் வெளியாகும் என ஹெச்.வினோத் அறிவித்துள்ளார். ஜிப்ரான் இசையில் இப்பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என அஜீத் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.