நாளை திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட்!

Filed under: தமிழகம் |

நாளை மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையை பெறுவதற்கான திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், திமுக அரசு பல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அறிவித்துள்ளது. அவ்வகையில், இவ்வருடம் முதல் தமிழகத்தில் 11ம் வகுப்பு படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் அனைத்து வகைப்பாடப் பிரிவைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.1500 மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை பதிவிறக்கம் செய்து கொள்ளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.