நிதி கொடுத்த முதலமைச்சர் தூக்கியெறிந்த பெண்!

Filed under: இந்தியா |

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ரூ.2 லட்சம் நிதி கொடுத்துள்ளார். அந்த பணத்தை அப்பெண் தூக்கி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில பாதாமி என்ற தொகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ரூபாய் 2 லட்சம் நிதியுதவியளித்தார்.

ஆனால், அப்பணத்தை அவர் சித்தராமையா காரின் முன் தூக்கி எறிந்தார். “பணத்தைவிட எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்று கூறியபடி அவர் சித்தராமையா மீது பணத்தை தூக்கி வீசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.