நியூசிலாந்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்?

Filed under: உலகம் |

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்து நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் நியூசிலாந்து நாட்டிலுள்ள கெர்மடெக் தீவில் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் 7.1 என்ற அளவில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.