தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நியூஸ் பேப்பரில் உணவு பொருட்களை பார்சல் செய்து தருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
உணவகங்களிலும், டீக்கடைகளிலும் அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் வடை, பஜ்ஜி போன்ற உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் உணவுப் பொருள்களை பார்சல் செய்யும் போது அந்த எழுத்துக்களில் உள்ள வேதிப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். காகிதங்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் உணவு பொருட்களை பார்சல் செய்ய வாழை இலை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.