நீட் தேர்வுக்கான ஆலோசனைகள்!

Filed under: தமிழகம் |

நீட் தேர்வு நாளை நடக்கவிருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான இதற்கு இதோ சில ஆலோசனைகள்…

இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என்ற 3 பாடப்பிரிவுகளில் 180 கேள்விகள் நீட் தேர்வில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில் இருக்கும். அதில் ஒரு பதிலை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720 என்ற நிலையில் மாணவர்கள் நன்கு அறிந்த கேள்விகளை முதலில் எழுத வேண்டும். அதன்பின் தெரியாத கேள்விகளுக்கு யோசித்து எழுத வேண்டும். மாணவர்கள் தங்கள் பதில்களை பால்பாயிண்ட் பேனாவுடன் குறிக்க ஓ.எம்.ஆர். தாள் வழங்கப்படும். எனவே, ஓ.எம்.ஆர். தாளை பற்றியும், அதில் உள்ள பதில்களை எவ்வாறு குறிப்பது என்பது பற்றியும் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் காதுகளில் தோடு, மூக்குத்தி, காதுமாட்டி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது. கிளிப் மாட்டக்கூடாது. மாணவர்கள் பெல்ட் அணியக்கூடாது. கைக்கெடிகாரம், கால்குலேட்டர், தொப்பி, ஹெட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது. இவையெல்லாம் பின்பற்றி மாணவர்கள் நீட் தேர்வை எழுத வாழ்த்துக்கள்.