நெற்றிக்கண் செய்தி எதிரொலி

Filed under: அரசியல்,தமிழகம் |

dpi-1 (1)தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில்  உதவி  தொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் கணேசன் இவர் பல ஆசிரியர்களுக்கு மாவட்ட தொடக்ககல்வி அலுவலரின் கையொப்பத்தை இவரே போட்டு கோப்பு தயார் செய்து பணி மாறுதல் உத்தரவு வழங்கி இருந்தார். இதை நெற்றிக்கண் பிராடு கணேசன் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்து மொரப்பூர் ஏ.இ.ஒ கணேசன்-ஐ பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது சரியான நடவடிக்கை தான் அதே சமயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் AEO சுப்பிரமணி ஆசிரியர்களிடம் நடத்திய வசூல் வேட்டை பற்றி நெற்றிக்கண் செய்தி வெளியிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடக்க கல்வி துறை இவ்வளவு ஆமை வேகத்தில் செயல்பட்டால் எப்படி கல்வி வளர்ச்சி அடையும் என்பது ஒரு கேள்விகுறி.