சென்னை,மே 6
நாம் தொடர்ச்சியாக டாக்டர் தணிகாசலம் ஒரு போலி டாக்டர் என்றும், கொரனா விற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றுகிறார் என்று ஆதாரபூர்வமாக செய்திகளை வெளியிட்டுவந்தோம்.
அதேபோல் அவர் ஒரு டாக்டர் அல்ல, மனநோயாளி என்ப்தையும் தெரியப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இந்த நிலையில் தான் தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் அவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்த வேளையில் இன்று காலை போலி சித்த வைத்தியர் தணிகாசலத்தை கைது செய்தனர்.
நம் செய்தியின் அடிப்படையில் போலி சித்தா டாக்டர் தணிகாசலத்தை கைது செய்த தமிழ்க அரசையும் சுகாதாரத்துறையையும் நம் நவீன நெற்றிக்கண் வார இதழ் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.