‘பகாசூரன்’ செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Filed under: சினிமா |

மோகன்ஜி இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் அடுத்த மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சற்றுமுன் படத்தின் இரண்டாவது பாடலாக “காத்ம்மா” என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இப்பாடலை அவரே பாடியுள்ளார். செல்வராகவன், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.