படத்தின் தலைப்பு என்ன?

Filed under: சினிமா |

இன்று மாலை “சூர்யா 41” திரைப்படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“சூர்யா 41” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகவிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சூர்யா 41 படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பாலாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகவிருக்கும் இந்த டைட்டில் “வணங்கான்” அல்லது “கடலாடி” என்ற இரண்டு டைட்டில்கள் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறப்பட்டது. இறுதியாக “வணங்கான்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.