பதவி நீக்கப்பட்ட வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா?

Filed under: அரசியல்,தமிழகம் |

பதவி நீக்கப்பட்ட  வி பி துரைசாமி – பாஜக பக்கம் சாய்கிறாரா?

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி பி துரைசாமி நேற்று விடுவிக்கப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமிக்கும் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாக நல்லுறவு இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகனை சந்தித்த அவர்வாழ்த்து தெரிவித்தார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் பா.ஜ.,வில், துரைசாமி சேரப்போவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த விபி துரைசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுவதாக கூறினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்த அவர் திமுகவில் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு அந்த பதவி வழங்கப்படுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் வி பி துரைசாமி இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. அவர் இன்று கமலாலயம் சென்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.