“பதான்” படத்தின் வசூல் சாதனை!

Filed under: சினிமா |

சமீபத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய “பதான்” திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது “கேஜிஎப் 2” திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது “பதான்.”

படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக் கான் பதான் தனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறியிருந்தார். வெளியாகி 15 நாட்களில் உலகளவில் 900 கோடி ரூபாய் அளவுக்கு உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கேஜிஎப் 2 வசூலை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. “பாகுபலி 2”-ன் வசூலான 510 கோடி ரூபாயையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.