“பரம்பொருள்” டீசர் வெளியானது!

Filed under: சினிமா |

சமீபத்தில் நடிகர் சரத்குமார் நடித்த “போர் தொழில்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவ்வாண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றானது. இப்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான “பரம்பொருள்” டீசர் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் அமிதாஷ் முக்கிய வேடத்தில் சரத்குமாரோடு இணைந்து நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜ் டிவிட்டரில் வெளியிட்டார்.