பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

திருநெல்வேலி மாவட்டத்தின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கின்ற தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 11ம் தேதி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பானவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் எவ்வித மாறுதலுமின்றி 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திருவிழா இருந்தாலும் அன்றைய தினம் தேர்வுகள் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.