பள்ளியில் விஜய் சேதுபதியின் ஒன் சைட் லவ்!

Filed under: சினிமா |

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி பேசியபோது, “நான் பள்ளி படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். ஆனால் அந்த பெண் ஷாருக் கானை காதலித்தது. அதற்குப் பழிவாங்க இத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. ஒருவழியா இந்த படத்தில் பழிவாங்கி விட்டேன்” எனப் பேசினார். இதற்கடுத்து பேசிய ஷாருக் கான் “விஜய் சேதுபதி என்னை பழிவாங்கி இருக்கலாம். ஆனால் என்னிடம் இருந்து என் ரசிகைகளைப் பிரிக்க முடியாது” எனப் பதிலளித்துள்ளார்.