பாகுபலி பாணியில் சூர்யா படம்!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யா நடிப்பில் பாகுபலி பட பாணியில் திரைப்படம் உருவாக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்திக் நடித்து ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இப்படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், சூர்யா இத்திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. திரைக்கதை தயாராக இருப்பதாகவும் வரும் ஜூலை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. “வாடிவாசல்” படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் உடனடியாக இத்திரைப்படத்தை தொடங்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.