பாஜகவினருக்கு ஜெயக்குமார் அறிவுரை!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு அறிவுரையாக கூறியுள்ள பதில்கள் வைரலாகி உள்ளது.

சமீபகாலமாக சசிகலா தன்னை அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறி வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதாக பேசி வருவது அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. கட்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரை கட்சி தொண்டர்களோ மக்களோ ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பலரும் அமமுகவிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். சசிகலாவை பாஜகவில் இணைத்து கொள்வது அவர்களது தனிப்பட்ட முடிவு. ஆனால் அவரை நம்பி புதைக்குழியில் விழுந்துவிட வேண்டாம் என்பது எனது கருத்து” என்று கூறியுள்ளார்.