பாஜகவுக்கு வாக்களித்தால் 5 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை ஜொலிக்க வைப்போம்….அமித்ஷா பேச்சு

Filed under: Uncategory,அரசியல்,இந்தியா |

இந்த முறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்து பாருங்கள், 5 ஆண்டுகளுக்குள் மேற்குவங்க மாநிலத்தை ஜொலிக்க வைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த பத்தாண்டுகளாக மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கைகள் பொய்த்து விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அரசியல் வன்முறை காரணமாக கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய அமித்ஷா,அதற்கு இதுவரை மம்தா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வியெழுப்பினார்.

வெள்ள நிவாரணப்பணியிலும் பெரும் ஊழல் செய்த மம்தா பானர்ஜி தனது உறவினர்களை ஆட்சியில் அமர வைக்க முயற்சித்து வருவதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.