பாஜகவை அடக்கி வாசிக்க சொல்லும் முன்னாள் அமைச்சர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக அடக்கி வாசிப்பது நல்லது என்று கூறியிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும், அதிமுகவும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இரு கட்சியின் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பாஜக மேலிடத்தில் உள்ளவர்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறியுள்ளனர், எடப்பாடி பழனிச்சாமி கூட அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என்றும் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், “பாஜக அடக்கி வாசிப்பது நல்லது, அதுதான் நாடாளுமன்ற தேர்தலுக்கு நல்ல விஷயமாக அமையும், புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.