பாஜக அலுவலகத்தின் மீது ரவுடிகள் கல்வீச்சு!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், 2 பேருக்கு மண்டை உடைந்தது. மேலும், சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளானர். இதுகுறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது வெருப்பைக் காட்ட இது போன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. தமிழக போலீசார் உடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தமிழக பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.