பாடகராக மாறிய காமெடி நடிகர்!

Filed under: சினிமா |

நடிகர் சந்தானம் காமெடியனாக நடித்து வந்ததோடு அல்லாமல் நாளடைவில் ஹீரோவாக பிரவேசமானார். தற்போது பாடகராகவும் மாறியுள்ளார்.

இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிக்’. இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். படத்தில் சந்தானம் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு நடந்துள்ளது. படத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள தன்யா ஹோப் விளம்பர விநியோகிஸ்தர் கேரக்டரில் உள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படம் சந்தானம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இப்படத்தை பார்த்து சந்தானம் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தானம் பாடிய பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் ரிலீசாகவுள்ளது.