பாடம் கற்றுக்கொண்ட விஜய் தேவரகொண்டா!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டாராக உருவாகி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேன் இந்தியா படமான “லைகரி”ல் நடித்தார். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது. “லைகர்” படத்துக்குப் பின் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக “குஷி” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்போது விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டு பேசியபோது, “எனது நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் “லைகர்” தோல்வி ஏற்படுத்தவில்லை. ஆனால் படத்தின் ரிசல்ட்டை படத்தின் ரிலீஸுக்கு முன்பே பேசக் கூடாது என்ற தண்டனையை எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.