பாண்டிச்சேரி சபாநாயகர் வருத்தம்!

Filed under: அரசியல் |

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என பாண்டிச்சேரி சபாநாயகர் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திருப்பூர் மாநகர் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 5000 பேருக்கான அன்னதானத்தையும் தொடங்கி வைத்து பாண்டிச்சேரி சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்தவர், “இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது.

திராவிட மாடல் அரசு என சொல்லிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்காதது வருத்தமளிப்பதாகவும், மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதலமைச்சர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது வருத்தம்” என்று கூறினார்.