பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பற்றி தகவல்!

Filed under: இந்தியா,சினிமா,தமிழகம் |

பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், இந்தி, கன்னனடம் என பல்வேறு மொழிகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்கள் பாடியுள்ளார். மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகியான இவர், இங்கிலாந்து நாட்டில் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மூளையில், ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு அவருக்கு கழுத்தில் கடும் வலி இருந்ததாகவும், இன்று அவரைப் பார்க்கச் சென்றபோது, அவரது உடல் நிலை சீரராக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் உடல் நிலை குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.