பாம்பை சாப்பிட்ட 3 வயது சிறுவன்!

Filed under: இந்தியா |

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பை மென்று சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்பாத் மாவட்டத்திலுள்ள மத்னாபூரில் வசிக்கும் தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் (3 வயது). இவர் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பாட்டியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் முன் வந்து பார்த்தபோது, ஆயுஷ் தன் வாயில் எதையோ மென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெற்றோர், அதை வாயில் இருந்து எடுத்தபோதுதான் அது பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். உடனே, இறந்த பாம்பை பையில் போட்டு, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 24 மணி நேரக் கண்காணிப்புக்குப் பிறகு குழந்தை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தனர். தற்போது, குழந்தை மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.