பார்த்திபன் நெகிழ்ச்சி!

Filed under: சினிமா |

நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவில் “தங்கல்,” “தாரே ஜாமின் தார்,” “தூம்- 3” உட்பட ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்தவர். இவரது நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால்சிங் சத்தா.” இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் அமீர்கான் ஈடுபட்டுள்ளார். படத்தைப் பார்த்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், Lal singh Chaddha ‘பார்த்து கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன்,“ U r just spreading LOVE through this film to a society where there’s is hatred and negativity” Amazing movie. அன்பை, அர்ப்பணிப்பை, காதலை, கடமையை கண்ணியத்தை இதை விட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து, அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம் எனப் பதிவிட்டுள்ளார்.