நடிகை தமன்னா கொரோனாவால் பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி என தகவல்!

Filed under: சினிமா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 65 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் வைரசால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அமைச்சர்கள், உலகத் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் ஆகியோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரரானா வைரசால் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பம், இயக்குனர் ராஜமவுலி உட்பட பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை தமன்னாவின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதை அவருடைய சமூக வலைதளம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.