பாலகிருஷ்ணா குறித்து சூப்பர் ஸ்டாரின் கருத்து!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில், “பாலய்யா ஜீப்பையே பறக்கவிடலாம், நான் செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

“வீரசிம்மா ரெட்டி” பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு திரைப்படம் ரிலீசானது. அமெரிக்காவிலும் இப்படம் ரிலீசான நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்தனர். ஆனால் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சினிமா ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த படம் மட்டுமில்லை, பாலகிருஷ்ணாவின் அனைத்து படங்களிலும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் கூட நம்பும் படியாக இருக்காது. என்.டி.ஆர். 100வது ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “பாலய்யா தட்டினாலே ஜீப் பறக்கிறது. ஆனால் அதை நானோ சல்மான் கானோ, ஷாருக் கானோ செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். பாலய்யாவை மக்கள் பாலகிருஷ்ணாவாக பார்க்கவில்லை. என்.டி.ஆராகதான் பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.