“பிக்பாஸ்” ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. அனைத்து சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
இம்முறை பிக்பாஸ் சீசன் ஜூலை மாதத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை கமல்ஹாசனுக்கு இதுவரை அவர் வாங்காத தொகை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆறாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சீசனில் கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு படத்துக்கு கமல்ஹாசன் வாங்கும் சம்பளத்துக்கு சமம்.