பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மனைவி கைது!

Filed under: தமிழகம் |

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்பட்டவர். அவர் ஏற்கனவே சரணடைந்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரணவ் ஜுவல்லரி மீது சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தது. தமிழ்நாடு முழுதும் அந்த கடைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இதில் கிலோ கணக்கில் நகை ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்திருந்தது. இருவரும் தலைமறைவாகி பின் சமீபத்தில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரது மனைவி கார்த்திகாவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.