பிரணாய் ராய் என்.டி.டி.வி.யிலிருந்து விலகல்!

Filed under: இந்தியா |

பிரணாய் ராய் மற்றும் அவருடைய மனைவி திடீரென என்.டி.டி.வி. இயக்குனர் பதவியிலிருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் அதானி என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வாங்கினார். அதன் பிறகு நடந்த கூட்டத்தின் முடிவில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இயக்குனர் பதவியிலிருந்து விலக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது என்.டி.டி.வி.யின் மேலும் 26 சதவீத பங்குகளையும் அதானி குழுமம் வாங்க முன் வந்துள்ளதை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் என்று என்.டி.டி.வி. இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இருப்பினும் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.