பிரதமரும், முதலமைச்சரும் ரஜினிக்கு அழைப்பு!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவிற்கும், முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த இரண்டு விழாவிற்கும் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஜூன் 9ம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க இருப்பதாகவும் அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ரஜினிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவுக்கும் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு விழாவுக்கு ரஜினிகாந்த் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.