பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் கூறிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

Filed under: இந்தியா |

பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

 

பிரதமர் மோடி “இனிய ரமலான் வாழ்த்துக்கள். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை இந்த நல்ல தருணம் மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்” என்று வாழ்த்தியுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் பதிவில் “ரமலானையொட்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மனிதர்களுக்கு சேவை செய்யவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட நம்மை நாமே அர்ப்பணம் செய்து கொள்ள உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.