பிரதமர் மோடிக்கு பதிலடியா?

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளவதை குறித்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், “திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை உண்டாக செய்துவிட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புதமான வரலாறு நமக்கு பெருமையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும்’ என பேசியிருந்தார். இன்று இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக்கூடாது. இவ்வாறான வரலாற்று திரிபுகள்தான் நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்தாகும். அறிவியல் பார்வையை உருவாக்குவதுதான் இன்றைய காலத்தின் தேவை. பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.