பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பா?

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

வரும் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாகவும் அப்போது அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தின் புதிதாக ஒருங்கிணைப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 27ம் தேதி சென்னை வரப் போவதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது இருவரும் சந்திக்கும் நிகழ்வு நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி சென்னை வர இருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.