பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தலையிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் மத்திய அமைச்சர்கள் விவரித்தினார். மேலும் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர் கலவரத்தை இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாக அடக்கப்படும் என்றும் அங்கு இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.